கோயம்புத்தூர் செப், 23
தேசிய தர சான்று பெறுவதற்கு விண்ணப்பித்த பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவ குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடந்த 2018ம் ஆண்டு தேசிய தர சான்று வழங்கப்பட்டது. அதன்படி ஒரு படுக்கைக்கு ரூ.10 ஆயிரம் வீதம் கடந்த 3 ஆண்டுகளாக நிதி வந்தது. இந்தநிலையில் தேசிய தர சான்றுக்கு மீண்டும் விண்ணப்பிக்கப்பட்டு உள்ளது.
இதைதொடர்ந்து முதற்கட்டமாக மாநில அளவிலான மருத்துவ குழுவை சேர்ந்த தர்மபுரி மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜேஸ்கண்ணா, நாமக்கல் தேசிய சுகாதார இயக்க அலுவலர் ஜெயந்தி, மத்திய தர சான்று குழுவை சேர்ந்த செவிலியர் வாசுகி ஆகியோர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டனர். நோயாளிகளிடம் உடல் நலம் குறித்தும், மருத்துவமனையில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்தும் விசாரித்தனர்.
அப்போது வார்டில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்களிடமும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தனர். ஆய்வின் போது கோவை மாவட்ட மருத்துவத்துறை இணை இயக்குனர் ராஜா, மருத்துவர்கள் உடனிருந்தனர்