நாகப்பட்டினம் ஆகஸ்ட், 2
நாகை ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத்தலைவர் வேணு தலைமை தாங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்டசெயலாளர்கள் முருகையன், சுப்பிரமணியன், தங்கமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் பூங்கோதை கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்த வேண்டும். தினக்கூலியை ரூ.600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். 55 வயதை கடந்த அனைத்து முதியோருக்கும் ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
#Vanakambharatham#Nagapattinam#news