திருவண்ணாமலை செப், 14
திருவண்ணாலை நகராட்சி கீழ்நாத்தூர் நகராட்சி தொடக்கப்பள்ளி மற்றும் உயர் நிலைப்பள்ளியில் ஆட்சியர் முருகேஷ் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஆய்வின் போது அவர் பள்ளிகளை தூய்மையாக வைத்திருக்க அறிவுறுத்தியதோடு மாணவர்களின் கல்வி தரம் குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் மாணவ, மாணவிகளிடம் கேட்டறிந்தார்.
அதன்பின் திருவண்ணாமலை நகராட்சி தொடக்கப்பள்ளியில் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்தும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து நியாயவிலை கடையில் வினியோகம் செய்யப்படும் உணவு பொருட்கள் தரமாக உள்ளதா என்றும், எடை சரியாக வழங்கப்படுகிறதா என்றும் ஆய்வு செய்தார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, திருவண்ணாமலை உதவி ஆட்சியர் வெற்றிவேல் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.