மதுரை செப், 11
தென்னிந்திய புத்தக பதிப்பாளா் சங்கத்தின் சாா்பாக ஆண்டுதோறும் புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இத்தாண்டு, மதுரை மாவட்ட நிா்வாகத்தின் சாாபில் செப்டம்பா் 3ம் தேதி முதல் 13ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் புத்தகக்கண்காட்சி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து, மதுரை ஆட்சியர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மதுரை தமுக்கம் மைதானத்தில் செப்டம்பர் 23 முதல் அக்டோம்பர் ,03 வரை காலை 11 மணி முதல் இரவு 9 மணி வரை புத்தகக் கண்காட்சி நடைபெறும். இங்கு 200 அரங்குகளும், சிறார்களுக்கான அரங்கமும் அமைக்கப்படும். இவ்வாறு அவர் அறிக்கையில் கூறியுள்ளார்.