கீழக்கரை செப், 10
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மறவர் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.
போலீஸ் பொதுமக்கள் மாவட்ட இணை செயலாளர் கீழக்கரை முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் அதிமுக ஸசுரேஷ் தலைமையிலும் மாவட்ட தலைவர் பெருமாள் முன்னிலையிலும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் சிறப்பு அழைப்பாளராக கீழக்கரை 4 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் சூரியகலா மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயலாளர் மகாலிங்கம் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க நிர்வாகிகள் மறவர் தெரு முக்கிய நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்