Spread the love

நாகப்பட்டினம் செப், 6

புதுமைப்பெண் திட்டம் தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் சார்பில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி புதுமைப்பெண் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து நாகை அரசு மருத்துவக்கல்லூரியில் நடந்த விழாவில் அரசு பள்ளியில் பயின்று மேற்படிப்பு பயிலும் 1,072 மாணவிகளுக்கு தலா ரூ.1000 உதவித்தொகை அவரவர் வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகள் வழங்கும் விழா நடந்தது. மாவட்ட சமூகநல அலுவலர் பாத்திமுன்னிசா வரவேற்றார். மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், தமிழ்நாடு தாட்கோ தலைவர் மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆட்சியர் அருண்தம்புராஜ், மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வங்கி கணக்கில் செலுத்தும் ஆணைகளை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *