ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 20 மண் தேதி உலக கடற்கரை தூய்மை தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நாளில் கடற்கரையில் கிடக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகளை அகற்றும் பணியினை சமூக நல தொண்டு நிறுவனங்கள் மேற்கொள்வது வழக்கம்.
கீழக்கரை கடற்கரையில் நகராட்சி நிர்வாகமும் கடலோர பாதுகாப்பு படையும் இணைந்து தூய்மை பணியினை மேற்கொண்டனர். இதில் தூத்துக்குடி கடலோர பாதுகாப்பு கமாண்டர், நகராட்சி தலைமை பொறியாளர் அருள், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா மற்றும் நகராட்சி பணியாளர்களும் கலந்து கொண்டனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.