மலேசியா செப், 5
மலேசியாவில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய நிறுவனரும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும் கேப்டன் விஜயகாந்தின் 73வது பிறந்தநாள் வருணா முகில் இசை குடும்பம் முனீஸ்வரன், குமரதேவன் கிருஷ்ணன், குணவதி சேகர், கைஸ் ராஜா ஆகியோர் தலைமையில் மிக பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டது..
கேப்டன் எப்படி மக்களின் பசி அறிந்து மக்களுக்கு பசி ஆற்றக்கூடியவரோ அதே வகையில் மலேசியா தமிழரான டத்தோ பத்மநாதன் மற்றும் தொண்டர்களும் ரசிகர்களும் இணைந்து மிகச் சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கி சிறப்பான முறையில் கேப்டன் பிறந்தநாளில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கி கேப்டன் பிறந்தநாள் விழா மலேசியாவில் கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்வில் தேமுதிக தொண்டர்களும், கேப்டன் ரசிகர்களும் மற்றும் மலேசியாவில் பணிபுரியும் தமிழர்கள் மற்றும் ஏராளமானோர் கலந்துகொண்டு கேப்டனை வாழ்த்தி மகிழ்ந்து பிறந்தநாளை கொண்டாடினர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.