ஐக்கிய அமீரக துபாயில், அமீரகத்தில் நிலவும் அதிக கோடை வெப்ப காலங்களில் அமீரக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
அதன் அடிப்படையில் அரசு அறிவுறுத்தலின் படி அமீரகம் மற்றும் அல்லாமல் இந்தியாவிலும் பல சமூக சேவைகள் புரிந்துவரும் கிரீன் குளோப் அமைப்பு சார்பாக “இதயங்களை குளிர்வித்தல் ” எனும் மூன்றாம் பகுதி நிகழ்வு துபாய் மதினத் ஹிந்த் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள கட்டிட பணியிடங்களிளை (construction sites) தேர்ந்தெடுத்து அப்பகுதியில் உள்ள சுமார் 350 தொழிலாளர்களுக்கு ஆப்பிள்,ஆரஞ்சு லெபன், பிஸ்கட், தண்ணீர், பழச்சாறு, கேக் போன்றவை வழங்கப்பட்டது.
கீரின் குளோப் சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் அமீரக குடும்பங்கள் மற்றும் நமது கீரின் குளோப் விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள், மேலும் பங்களிப்பை வழங்கியவர்கள், தொழிலாளர் பகுதி அதிகாரிகள் மற்றும் தொழிலாளர்கள் சமூக மேம்பாட்டு ஆணைய தன்னார்வலர்கள் என பல்வேறாக பங்கேற்று இந்த நிகழ்வை சிறப்பித்துள்ளார்.
இந்நிகழ்வு ரகுல் மைதீன், சேக் சிந்தா, பீர் முஹம்மது மற்றும் சபீர் ஒருங்கிணைப்பில் சிறப்பாக நடைபெற்றது மேலும் இந்நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும், அரசுக்கும், தன்னார்வலர்களுக்கும் மற்றும் ஆதரவளித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக அமைப்பின் நிறுவனர் சிறந்த சமூக சேவகி டாக்டர் பட்டம்பெற்ற முனைவர் ஜாஸ்மீன் கூறினார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.