ராமநாதபுரம் ஆக, 27
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகில் உள்ள வாழவந்தாள்புரம் கிராமத்தை சேர்ந்த இரண்டு சிறுமிகள் இடிதாக்கி உயிரிழந்தனர்.
ஒரே வீட்டில் அக்கா தங்கை என இருவரும் உயிரிழந்த சம்பவம் ஒட்டு மொத்த கிராமத்தையும் சோகத்தில் ஆழ்த்தியது.
SDPI கட்சியின் சார்பில் ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணைதலைவர் கீழை ஜஹாங்கீர் அரூஸி வாழவந்தாள்புரம் கிராமம் சென்று உயிரிழந்த சிறுமிகளின் பெற்றோர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள அந்த குடும்பத்திற்கு நிவாரண நிதியாக 50 லட்சம் ரூபாய் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு SDPI கட்சியின் மாவட்ட தலைவர் ரியாஸ்கான் கோரிக்கை வைத்திருந்தார்.
பிள்ளைகளை இழந்து வாடும் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்கிட தமிழக அரசு முன்வரவேண்டும் என்று மொத்த கிராம மக்களும் கோரிக்கை விடுக்கின்றனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்