டிஜிட்டல் முறையில் ஆதார் சரிபார்ப்பை வழங்கும் புதிய செயலியை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. டிஜிட்டல் பரிவர்த்தனை செய்வது போல், QR Code வாயிலாக ஆதார் தகவல்களை வழங்க முடியும். ஆதார் நகலை பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபடுகின்றனர். இதனைத் தடுக்கவும், ஆதார் சரிபார்ப்பை எளிமையாக்கும் வகையிலும் இந்த புதிய செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இச்செயலி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.