கீழக்கரை மார்ச், 24
கீழக்கரை நகராட்சியில் மாதமொருமுறையும் தேவைப்படின் அவசர கூட்டங்களும் நடைபெறுவதுண்டு.இந்த கூட்டங்களுக்கு அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் அழைப்பு கொடுப்பர்.
நேற்று முன் தினம் கீழக்கரை நகர்மன்ற கூட்டம் ரகசியமாய் நடத்தப்பட்டு சில நிமிடங்களேயே கூட்டம் நிறைவு பெற்றுள்ளது.இந்த கூட்டத்தில் பல லட்சம் ரூபாய் டெண்டர் அனுமதி வழங்கியது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்களும் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை அல்ஹாஜ் செய்யது சலாஹுதீன் அவர்கள் வழங்கியுள்ள 25 லட்சம் நிதி உதவியில் ஓரிரு திட்டங்களுக்கான ஒப்பந்தமும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்த கூட்டம் குறித்த தகவலை எந்த பத்திரிக்கையாளர்களுக்கும் தெரிவிக்காமல் ரகசியமாய் நடத்தியது குறித்து பொதுமக்களிடையே பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
இனிவரும் காலத்திலாவது ரகசியமாய் அவசர,அவசரமாய் கூட்டங்கள் நடத்தாமல் பத்திரிக்கையாளர்களுக்கும் தகவல் கொடுத்து நடத்தப்பட வேண்டுமென்பதே ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் கோரிக்கையாகும்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.