சென்னை மார்ச், 21
அரசு வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3,274 டிரைவர், கண்டக்டர் பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி www.arasubus.tn.gov.in இணையதளத்தில் சென்று தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம். ஏப்.21 ம் தேதிக்குள் பதிவு செய்து விடுங்கள்.