மதுரை செப், 1
மதுரை அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்பில் செவித்திறன் பரிசோதனை அறை திறக்கப்பட்டது. அரசு மருத்துவமனை தென் மாவட்டத்தில் மிக முக்கிய மருத்துவமனையாக மதுரை அரசு மருத்துவமனை உள்ளது. இங்கு ஏராளமானவர்கள் சிகிச்சைக்காக நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில், மதுரை அரசு மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை சிகிச்சை பிரிவில் செவித்திறன் பரிசோத னைக்காக நவீன வசதிகளுடன் அறை திறக்கப்பட்டது. துறை தலைவர் தினகரன் தலைமை தாங்கினார். முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்த புதிய அறையை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேல் நேற்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பேராசிரியர்கள் அருள் சுந்தரேஷ்குமார், ராதாகிருஷ்ணன், செவித்திறன் நிபுணர் கார்த்திகேயன், மருத்துவ இருப்பிட அதிகாரிகள் ரவீந்திரன், ஸ்ரீலதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.