Spread the love

கீழக்கரை செப், 9

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான தெரு நாய்கள் அவ்வப்போது ஊர்வலமாய் வருவதும் மக்களை கடிப்பதுமாய் உள்ளன.

கடந்த இரண்டு ஆண்டில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் என பலரையும் நாய்கள் கடித்து அச்சுறுத்தி வருகின்றன. இதுகுறித்து சமூக ஆர்வலர்களும் அரசியல் கட்சிகளும் நகராட்சி கவனத்திற்கு கொண்டு சென்றனர்.

கீழக்கரை நகர் SDPI கட்சி நிர்வாகிகள் தொகுதி நிர்வாகி தாஜுல் அமீன் நகர் தலைவர் ஜமீல் தலைமையில் சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லாவை சந்தித்து முறையிட்டனர்.

நாய்களை அப்புறப்படுத்துவதின் மூலமே மக்களுக்கு முழுமையான பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தின் உதவியை நாடியாவது தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டுமென்றனர்.

உங்களின் கோரிக்கையை உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்து சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா கூறினார்.

ஜஹாங்கீர் அரூஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *