Spread the love

ஆக, 27

பல்வலி(Tooth Pain) ஏற்பட பல காரணங்கள் இருக்கலாம். இந்த வலியிலிருந்து மீள்வது மிகவும் கடினம். சாப்பிடும்போதும் குடிக்கும்போதும் பற்கள் மற்றும் ஈறுகளில் கூச்சம் மற்றும் வலி ஏற்படுவதை கற்பனை கூட செய்து பார்க்க முடியாது. அந்த அளவிற்கு கொடுமையாகவும், தாங்க முடியாததாகவும் இருக்கும்.

குறிப்பாக இரவு நேரங்களில் ஏற்படக்கூடிய பல் வலியானது தாங்க முடியாத பிரச்சனைகளை தரக்கூடியது. இது வெறும் பற்களில் மட்டுமின்றி ஈறு மற்றும் தலையிலும் கடுமையான வலியை ஏற்படுத்தி அன்றைய நாளையே மோசமானதாக மாற்றுகிறது.

ஆனால் இந்த மாதிரியான கொடுமையான பல்வலியை (Teethache) நினைத்து நீங்கள் இனி கவலைப்பட வேண்டாம். சில எளிமையானவீட்டு வைத்தியங்கள் மூலம் பல்வலியில் இருந்து உடனடி நிவாரணம் பெறலாம்.

வெதுவெதுப்பான நீரில் உப்பு சேர்த்து வாய் கொப்பளிப்பதன் மூலம் பல்வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மருத்துவர்கள் பொதுவாக பல்வலிக்கு முதலுதவியாக இந்த தீர்வை பரிந்துரைக்கின்றனர். இந்த நடைமுறையை ஒரு நாளைக்கு 4-5 முறை செய்தால் பல்வலி குறையும்.

கிராம்பு எண்ணெயைப் பயன்படுத்துவது இயற்கையான வலி நிவாரணியாக கருதப்படுகிறது.

பருத்தி பஞ்சில் கிராம்பு எண்ணெய்யை நனைத்து, வலி உள்ள பற்கள் அல்லது ஈறுகள் மீது தடவ வேண்டும். இது சில நிமிடங்களிலேயே நல்ல பலனைக் கொடுக்கும் என பரிந்துரைக்கப்படுகிறது.

பேக்கிங் சோடா பல் வலியைப் போக்க உதவும். உங்கள் வழக்கமான பற்பசையுடன் பேக்கிங் சோடாவை கலந்து வலியுள்ள பல்லில் நேரடியாக தடவவும். இதன் மூலம் சில நிமிடங்களில் வலியிலிருந்து விடுபடலாம்.

சம அளவு ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் தண்ணீரைக் கலந்து வாய் கொப்பளிக்கவும். சிறிது நேரம் கழித்து நீங்கள் பல் வலியிலிருந்து நிவாரணம் பெற்றது போல் உணர்வீர்கள். ஆனால் எக்காரணம் கொண்டு ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் நீர் கலவையை விழுங்கிவிடாதீர்கள்.

பல்வலியைப் போக்க ஐஸ் கட்டியைப் பயன்படுத்தலாம். உங்கள் கையில் சில ஐஸ் கட்டிகளை எடுத்து, பல் வலியுள்ள பகுதிக்கு வெளியில் லேசாக அழுத்தி பிடிக்கவும்.

இது உங்கள் மூளையை அடையும் வலி சமிக்ஞைகளை தடுத்து நிறுத்தி, நிவாரணம் தருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

புதினா டீ உங்கள் பல்வலியிலிருந்து (Toothache) நிவாரணம் அளிக்கிறது. புதினா டீ தயாரிக்க, ஒரு கப் தண்ணீரில் சில புதினா இலைகளை சேர்த்து,அது பாதியளவு வரும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்த தேநீரை மெதுவாக பருகவும். அதனால் கிடைக்கக்கூடிய இளம் சூடு உங்கள் பற்கள் மற்றும் ஈறுகளுக்கு ஆறுதல் அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *