ஜூலை, 2
இனிப்பு என்று சொல்லியே ஒதுக்கிவிடும் கற்கண்டுகளில் எத்தனை நன்மைகள் இருக்கின்றன தெரியுமா? பலவகை கோளாறுகளை தீர்க்க அபாரமான மருந்துதான் இந்த கற்கண்டு.
திருமணம் போன்ற சுப வைபவங்களில் மட்டுமே கற்கண்டுகளை பார்க்க நேரிடுகிறதே தவிர, வீடுகளில் இதனை முழுமையாக பயன்படுத்துவதில்லை..
உண்மையை சொல்லப்போனால், கற்கண்டுகளை சாப்பிட்டு வருபவர்களுக்கு கண் பாதிப்புகள் வருவதில்லையாம்.. கண்பார்வை கூர்மைப்பெறுகிறது. பொலிவு பெறுகிறது. கண் பார்வை கோளாறு இருப்பவர்கள், தினமும் கற்கண்டை சாப்பிட்டு வந்தாலே போதும்.
சளி, இருமலை குணப்படுத்தும் நிவாரணமாக இந்த கற்கண்டு திகழ்கிறது. வாந்தி, குமட்டல் போன்ற தொந்தரவுகள் இருந்தால் கற்கண்டுகள் தீர்வு தருகின்றன. அதிலும் கொரோனா காலத்தில் சளி, இருமல் இருக்கும்போது, தினமும் கற்கண்டு சாப்பிட சொல்கிறார்கள் மருத்துவர்கள்.. அதனால்தான்,ஆயுர்வேத மருத்துவத்தில் கற்கண்டுகளுக்கு பிரத்யேக முக்கியத்துவம் இன்றும் உள்ளது.
இரவு நேரத்தில் வறட்டு இருமல் இருந்தால், சிறிது கற்கண்டு எடுத்து வாயில் வைத்து, அதன் சாறு மட்டும் மென்று உமிழ்ந்தால் இருமல் உமிழ்நீர் கட்டுப்படும்.. தொண்டைக்கும் இதமாக இருக்கும்.
கற்கண்டு, கறுப்பு மிளகு இரண்டையும் சம அளவில் எடுத்து நன்றாக பொடி செய்து டப்பாக்களில் எடுத்து வைத்து கொள்ள வேண்டும்.. இரவு படுக்கச்செல்லும் முன்பு, இந்த பவுடரை வாய்க்குள் போட்டுக் கொள்ள வேண்டும். ஆனால், இந்தப் பொடியை சாப்பிட்டதுமே தண்ணீர் குடிக்கக்கூடாது.. அப்படி குடித்தால் இருமல் அதிகமாகிவிடும்..
அதேபோல, கற்கண்டும் மிளகும் கலந்த பொடியை டீயில் கலந்து தினமும் குடித்து வந்தாலும் இருமல், தொண்டைவலிக்கு நிவாரணம் கிடைக்கும். கபம், கோழை ஆகியவற்றை சுத்தப்படுத்தும் இருமலை குணப்படுத்த தேவையான சத்துகள் கற்கண்டில் காணப்படுகின்றன.
உடலுக்கு புத்துணர்ச்சியையும் ஆற்றலையும் கற்கண்டுகள் தருகின்றன.. உடல் சோர்வு அதிகம் இருந்தாலும் கற்கண்டு சாப்பிட்டால், களைப்பு நீங்கிவிடும். ஆண்களின் விந்தணுவை மேம்படுத்துவதில் கற்கண்டுகளுக்கு பெரும்பங்கு இருக்கிறதென்றால் உங்களால் நம்ப முடிகிறது. ரத்தத்தில் அமில அளவு சரியாக வைத்திருக்க கற்கண்டு உதவுகிறது.. ரத்தத்தில் ஹீமோகுளோபினின் அளவையும் இந்த கற்கண்டுகள் அதிகரிக்க உதவுகின்றன..
சர்க்கரையை விட அதிக இனிப்பு உள்ளதால் செரிமானம் சீராகிறது. கற்கண்டுகளை பெருஞ்சீரகத்துடன் கலந்து சாப்பிட்டால் மிகச்சிறந்த மவுத்வாஷ் நமக்கு கிடைத்துவிடும். உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது இந்த கற்கண்டுகள். கோடை காலங்களில் சிறிது கற்கண்டுகளை சாப்பிட்டால், உடலிலுள்ள உஷ்ணங்கள் தணியும்.. எரிச்சலும் நீங்கும்.. அல்லது கற்கண்டு கலந்த தண்ணீரை குடித்து வந்தாலும் உடல் சூடு விலகும்.