கீழக்கரை ஆக, 29
இந்தியா முழுவதும் முத்தூட் நகை கடன் வழங்கும் நிறுவனம் சுமார் 4200 கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்நிறுவனத்தின் கிளை தற்போது ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் முத்தூட் புதிய கட்டிடம் இன்று இம்பாலா சுல்தான் காம்ப்ளக்ஸ் வள்ளல் சீதக்காதி சாலை பிள்ளையார் கோவில் எதிர்புறத்தில் காலை 9:30 மணி அளவில் முத்தூட் கட்டிடத்தில் நிர்வாக உறுப்பினர் ஹாஜா ரபீக் ரிப்பன் வெட்டி கட்டிடத்தை திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட சதுரங்க கழக தலைவரும், முன்னாள் ரோட்டரி சங்கத் தலைவருமான அப்பா மெடிக்கல் சுந்தரம் குத்துவிளக்கேற்றி துவங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து, நிறுவனத்தின் பரமக்குடி அலுவலக மேலாளர் ஜாஹிர் உசேன் முத்தூட் நிறுவனத்தின் சிறப்பு அம்சங்களையும் அதன் சேவைகளையும் மக்களுக்கு எடுத்துரைத்தார்.
இந்நிகழ்ச்சியில் முத்தூட் மண்டல மேலாளர் ஸ்ரீகாந்த் சிவகங்கை மாவட்ட மேலாளர் ரஞ்சித் குமார், கீழக்கரை கிளை மேலாளர் ஜாபர் சாதிக், கூடுதல் ரீஜினல் மேலாளர் முத்து சரவணன், கீழக்கரை காவல் ஆய்வாளர் பாலமுரளி சுந்தரம், தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் தலைவர் பழனி குமார், இந்தியன் வங்கி மேலாளர் சிவனேச செல்வம், இந்தியன் வங்கி ஊழியர்கள், கிளை மேலாளர்கள் அலுவலக ஊழியர்கள், முத்தூட் நிர்வாகிகள் மற்றும் கீழக்கரை முக்கிய பிரமுகர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.