Spread the love

ஜூன், 8

உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும் இன்றியமையாத ஒன்று. பால் சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட. பாலில் நல்ல தரமான புரதம், கொழுப்பு,சிறிய அளவில் மாவுச்சத்து, மக்னீசியம் போன்ற பலவிதமான சத்துக்கள் உள்ளன.

மற்ற பொருட்களில் இல்லாத சில சத்துக்கள் பாலில் உள்ளதால் நாம் எல்லோரும் 500 மி.லி. அளவு பாலைக் கண்டிப்பாக தினசரி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுருத்துக்கின்றனர்.

ஆனால். நம்மில் எத்தனை பேர் தினமும் பால் குடிப்பதை பழக்கமாக வைத்திருக்கிறோம். குழந்தைகளில் தொடங்கி பெரியவர்கள் வரை பலரும் பால் குடிப்பதை அதிகம் விரும்புவதில்லை. குறிப்பாக பெண்கள், பால் குடித்தால் குண்டாகி விடுவோம், முகப்பரு வந்து விடும் என்று பல காரணங்களை காட்டி பால் குடிப்பதை தவிர்த்து வருகிறோம்.

ஆனால், உண்மையில், தினமும் பால் குடிப்பதால் ஏற்படும் பயன்கள்..

1. மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் கண்டிப்பாக 500 மி.லி. வரைக்கும் பால் கண்டிப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

2, எலும்புகளின் வலிமைக்கு கால்சியம் மிகவும் முக்கியமானது. இத்தகைய கால்சியம் வயது அதிகரிக்கும் போது குறைய ஆரம்பிக்கும். பாலில் உள்ள கால்சியம் உங்களின் உடலை பராமரிக்கும்.

3. இரத்தக் கொதிப்பு கட்டுப்பாட்டிற்கும், உடல் பருமன் குறைவதற்கும், இதய நோயிற்கும், புற்றுநோய், நீரிழிவு நோய் உள்ளவர்களும் பாலை தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

4. சிறுநீரக கற்கள் இருக்கும் நோயாளிகள் கூட பாலை அருந்தலாம்.

5. பாலில் வைட்டமின் பி12 உள்ளது. இந்த வைட்டமின் பி 12 நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. தினமும் காலையிலும், இரவிலும் பால் குடிப்பதன் மூலம், வயிறு நிரம்பி ஆரோ

6. தினமும் இரவில் ஒரு கப் பாலில் 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் சேர்த்து குடித்தால் நன்றாக தூக்கம் வரும்

7. பாலில் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ளும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *