ஜூன், 3
பொதுவாக வெயில் காலம் தொடங்கிய உடனே, சாலை ஓரங்களில் பார்த்தால் ஒரு ஜூஸ் கடை ஆரம்பித்து இருப்பார்கள். அது தான் கரும்பு ஜூஸ் கடை. சாலையில் செல்லும் போது பார்த்தால், ஆங்காங்கே இந்த கரும்பு ஜூஸ் கடையை நாம் பார்க்கலாம். காரணம் வெயிலுக்கு இதமான பானமாகவும், அதிக ஆரோக்கியம் நிறைந்த பானமாகவும் கரும்பு ஜூஸ் இருக்கிறது.
என்ன தான் இந்த கரும்பு ஜூஸில் அதிக நன்மைகள் இருந்தாலும், இதிலும் சில தீமைகள் இருக்கிறது. அதாவது பழமொழி போல தான். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு. அதாவது நாம் கரும்பு ஜூஸ் அதிகமாக குடிப்பதால் சில பாதிப்புகள் ஏற்படுகிறது. அது என்னவென்று இப்போது பார்க்கலாம்.
உடல் எடை அதிகரிக்கும்
கரும்பு ஜூஸில் கலோரிகள் அதிகம் இருக்கிறது. அதனால் நாம் அதிகமாக கரும்பு ஜூஸ் குடிக்கும் போது உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. மேலும் இதனால் இரத்தத்தத்தில் சர்க்கரையின் அளவில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படுகின்றன.
கரும்பு ஜூஸில் உள்ள பாலிகோசனால் நம் செரிமான அமைப்பில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, வயிற்றில் வலி, வாந்தி, தலைச்சுற்றல், தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மேலும் செரிமான அமைப்பில் ஏதும் பாதிப்புகள் இருந்தால் கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ளவர்கள்
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும். காரணம், கரும்பு ஜூஸில் இயற்கையாகவே சர்க்கரை அதிகமாக இருக்கிறது. அதனால் சர்க்கரை நோயாளிகள் கரும்பு ஜூஸ் குடித்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகப்படுத்துகிறது.
பொதுவாக காய்ச்சல் உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் குடிக்கவே கூடாது. அதுபோல தலைவலி பாதிப்பு உள்ளவர்கள், கரும்பு ஜூஸ் குடித்தால் அது மேலும் தலைவலியை ஏற்படுத்துகிறது. எனவே அடிக்கடி தலை வலி இருந்தால் கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.
சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு
கரும்பு ஜூஸ் அதிகம் எடுத்து கொண்டால் அது, கல்லீரலில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மேலும் இது கல்லீரலுக்கு தீங்கு விளைவிக்கிறது.
அதுபோல கரும்பு ஜூஸில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இது சிறுநீரகத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள் கரும்பு ஜூஸ் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.