துபாய் ஜூன், 3
ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய அங்கிகாரமான பத்து வருடத்திற்கான கோல்டன் விசாவில் தமிழ் எழுத்தாளராக அமீரகத்தின் கோல்டன் விசா பெற்ற கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், மனநல மற்றும் வாழ்வியல் ஆலோசகர் என பன்முகத் திறமை கொண்ட டாக்டர் ஃபஜிலா ஆசாத் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகராக விளங்கும் அபுதாபியில் இயங்கிவரும் அதீப் குழும நிறுவனம் சார்பாக தொழிலாலர்கள் பயன்பெறும் வகையில் அமைக்கப்படுள்ள நூலக திறப்பு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூலகத்தை திறந்துவைத்து அங்குள்ள அனைவருக்கும் தன்னம்பிக்கை உரையாற்றினார்.
மேலும் அதீப் குரூப் அலுவலகத்தில் தொழிலாளர்கள் பயன்பெறும் விதமாக அமைக்கப்பட்ட நூலகத்தை அதீப் குழும நிறுவனத்தின் தலைவர் அன்சாரி தலைமையில் திறந்து வைத்து பேசிய டாக்டர் ஃபஜிலா ஆசாத்,
“நம் இல்லத்தை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்துக் கொள்வது போல், நம் உள்ளத்தையும் வேண்டாதவற்றை அகற்றி நல்லவைகளை நிரப்பி புதிய சிந்தனைகளுடன் நாம் வலம் வரவேண்டும். நூல்கள் அதற்கு முதன்மையான கருவியாக திகழ்கிறது. தவிர நாங்கள் ஹிப்னாட்டிஷம் மூலம் மனநலம், மன திடம் சார்ந்த ஆலோசனை கொடுக்கும்போது, ஒருவரை ஆழ்மன துயில் கொள்ள செய்வது மூலம் எதிர்மறை சிந்தனைகளை அகற்றி நேர்மறை சிந்தனைகளை மனதில் பதிய வைப்போம், அதுபோல் சிறந்த நூல்களும் உங்கள் எண்ணங்களை மட்டுமல்ல உங்கள் வாழ்க்கையையே முன்னேற்ற பாதையில் நகர செய்யும்” என உரையாற்றினார். அவர் பேசியது விழிப்புணர்வைத் தரக்கூடியதாக இருந்தது.
மேலும் அவர் எழுதிய நூல்களான திறந்திடு மனசே, மனசே மகிழ்ச்சி பழகு, 24ct வாழ்க்கை, புரிந்துகொள் மனமே உள்ளிட்ட நூல்களை அவர் கையெழுத்திட்டு நூலகத்திற்கு பரிசாக தந்தது குறிப்பிடத்தக்கது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக
தொழிலதிபர் பாராஜ் அல் குபைசி, அலைன் ஹோல்டரிங்ஸ் நிர்வாக இயக்குனர் இயாத் அல் நஸ்ஸரெல்லாஹ், என்ஜினீயர் இஸ்ஸாம் ஒஸ்மான்,
Eng. இஷாம் ஒஸ்மான், அலைன் ஹோல்டரிங்ஸ் மேலாளர் ஒஸ்ஸன் அமரி, NYU இயக்குனர் குல்விந்தர் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேலும் கேப்டன் டிவி மற்றும் தமிழக குரல் நாளிதழ் வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல் மற்றும் தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் வளைகுடா தலைமைநிறுபரும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியருமான நஜிம் மரிக்கா ஆகியோர் டாக்டர் ஃபஜிலா ஆசாத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.