Spread the love

துபாய் மே, 29

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள பல முன்னணி ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனங்களில் ஒன்றான டானூப் ப்ராப்பர்ட்டி (Danube Property) நிறுவனம், மற்றுமொரு சாதனையாக துபாயில் உள்ள அல் ஃபுர்ஜானில் 2022 இல் தொடங்கப்பட்ட திட்டத்தை அதிகாரப்பூர்வ அறிவித்த திட்டமிடப்பட்ட தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்பே “Pearlz by Danube” என்ற புதிய திட்டத்தை வாடிக்கையாளர்களின் உபயோகத்திற்காக வழங்கியுள்ளது.

மேலும் “டனூப் சொத்துக்கள் அதன் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உத்திரவாதத்திற்கேற்ப சொத்துக்களை அர்பணிப்பதில் மிகவும் கவனம் செலுத்திவருகின்றது அதற்கு Pearlz விநியோக திட்டம் ஒரு சான்றாகும்” என்று அதன் பெருமைக்குரிய டன்யூப் குழும நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் ரிஸ்வான் சஜன் கூறியுள்ளார்.

டன்யூப் நிறுவனம் அணைத்து வசதியும் உள்ளடக்கிய Pearlz நகரம் வழங்குவதன் மூலம் அவர்களின் குடியிருப்பாளர்களைக் கௌரவித்தன. இந்த அர்ப்பணிப்பு நிகழ்வு துபாய் நிலத் துறையின் இயக்குநர் ஜெனரல் மர்வான் பின் கலிதா மற்றும் டான்யூப் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ரிஸ்வான் சாஜன் ஆகியோர் இணைந்து Pearlz நகரத்தை திறந்து வைத்தனர்

Pearlz நகரமானது 480,179 சதுர அடி பரப்பளவைக் கொண்ட 300 நவீன குடியிருப்புகளை உள்ளடக்கியது, இதில் முழு வசதியுடன் கூடிய நேர்த்தியான ஸ்டூடியோ அடுக்குமாடி குடியிருப்புகள், ஒரு படுக்கையறை, இரண்டு படுக்கையறை மற்றும் மூன்று படுக்கையறை குடியிருப்புகள் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்கள். டென்னிஸ் மைதானங்கள், விளையாட்டுப் பகுதிகள் போன்ற வழக்கமான வசதிகளுடன் கூடுதலாக, 24 மணிநேரமும் செயல்படக்கூடிய மருத்துவருடன் இருக்கும் மெடிக்கல் கேர், பராமரிப்பவர்களோடு இருக்கக்கூடிய குழந்தைகள் தினப்பராமரிப்பு, தனிப்பட்ட செயலாளருடன் கூடிய ஸ்மார்ட் அலுவலகம் மற்றும் நவீன நீச்சல் குளம், நிகழ்ச்சிகள் நடத்தக்கூடிய பெரிய நவீன இடவசதி, பொதுபோக்கிற்காக நவீன் திரையரங்கு வசதி போன்ற பல தனித்துவமான வசதிகளை வழங்கி வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது இந்த Danube Pearlz நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

தஸ்லீமா (Taz)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *