கீழக்கரை மே, 28
தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் ஓடும் நகர்ப்புற பேருந்துகள் ஓட்டை உடைசலாகவும் மழை பெய்தால் குடை பிடிக்கும் நிலையிலும் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.
மதுரைக்குள் இயக்கப்படும் நகர்புற பேருந்துகள் பயணிகளின் முகம் சுளிக்கும் வகையிலேயே ஓடிக்கொண்டிருக்கிறது.இருக்கைகள் ஆட்டம் காணுகின்றன. மேற்கூரை ஓட்டையுடன் உள்ளன.
மதுரை மாட்டுதாவணி பேருந்து நிலையத்தில் இருந்து ஆரப்பாளையம் செல்லும் பேருந்தில் கட்டணம் 21 ரூபாய் என்ற போதிலும் பயணம் செய்வதற்கு ஏற்ற தகுதியில்லாமல் காயலான் கடைக்கு செல்லும் பேருந்தாக இயக்கப்படுகின்றன.
பழைய பேருந்துகளை கழிவு செய்து அதற்கு பதிலாக புதிய பேருந்துகள் இயக்கப்பட வேண்டுமென்கின்றனர் பொதுமக்கள். ஓட்டை வண்டியை வைத்தே பல லட்சம் வருமானம் பார்த்தும், தமிழக போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குவதாக கூறுவது புதிராக உள்ளது.
விடியல் ஆட்சியில் போக்குவரத்து துறைக்கு எப்போது விடியல் பிறக்குமோ?
ஜஹாங்கீர் அரூஸி/மாவட்ட நிருபர்.