மே, 23
பலருக்கு பிடித்தமான ஒரு அன்றாட பழக்கம் என்றால் அது சுவிங்கம் மெல்லும் பழக்கம்.
சுவிங்கம் சாப்பிடுவதால் நன்மைகள் மற்றும் தீமைகள் என இரண்டும் இருக்கிறது.
சுவிங்கம்மை வாயில் போட்டு மெல்வதால் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க செய்கிறது. குறிப்பாக இது மூளையின் செயல்பாட்டை செம்மைப்படுத்தி, ஞாபக சக்தியை கூட்டும் என ஒரு ஆய்வு கூறுகிறது.
சுவிங்கத்தை மெல்லும்போது எச்சில் உருவாகி கிருமிகளை கொல்லும். அத்துடன் வாயில் துர்நாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும்
சுவிங்கம் சாப்பிடுவதால் மன அழுத்தம் குறைந்து விடுமாம். மூளையின் செயல்பாட்டை சீராக வைப்பதால் மன அழுத்தம் பிரச்சினை உள்ளவர்களுக்கு நன்கு உதவும். சுவிங்கம் அதிகமாக சாப்பிட்டால் தலை வலி ஏற்படும்.
அதிக அளவில் சுயிங்கம் மென்றால் அது தாடையை பாதிக்கும். பல முறை தாடையை அசைத்து கொண்டே இருப்பதால், தாடையில் அதிக வலி ஏற்படும். அதிக தடவை உணவு உட்கொள்வதைச் சுவிங்கம் குறைக்கும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.