Spread the love

துபாய் மே, 22

ரிஃபா பாத்திமா சையது அபுதாகிர் ஐக்கிய அரபு அமீரகம் அல்அய்ன் நகரில் இயங்கு வரும் அரசு யு ஏ இ பல்கலைக்கழகத்தில் மருத்துவ உளவியல் மற்றும் ஆராய்ச்சி முதல்நிலை பட்டப்படிப்பை படித்து வந்தார். இந்நிலையில் சென்ற மாதம் வெளியான தேர்வு முடிவில் மேற்கண்ட ஆராய்ச்சி படிப்பில் அமிரகத்தின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்று அதற்கான சான்றிதழை கடந்த மாதம் ஏப்ரல் 24 அன்று பல்கலைக்கழகத்தின் விழாவில் வழங்கி சிறப்பித்ததையடுத்து கடந்த புதன்கிழமை அன்று முதலிடம் வந்த மாணவி பாவை துணைவேந்தர் காலி அலி பாராட்டு தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து கல்லூரியின் டீன் அலி அல் மர்சூகி, பாடத்திட்ட பேராசிரியர் டாக்டர் சல்மா மற்றும் அனைத்து பேராசிரியர்களின் பாராட்டுகளையும் பெற்றார்.

மேலும் இவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியை சேர்ந்தவர். இதே போல் இளங்கலை படிப்பிலும், அமீரகத்தில் முதல் மாணவியாக வந்தவர். அதற்காக அமீரக அரசு இவருக்கு பத்தாண்டிற்கான கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளதும் இவரது இரு சகோதரிகளும் படிப்பில் முதலிடம் பெற்று அரசின் கோல்டன் விசா பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவரது தந்தை சையது அபுதாகிர் துபாய் நகரில் சொந்தமாக நிறுவனங்களை நிர்வகித்து வருவதோடு சமூக சேவைகளின் செய்து வருகிறார்.

நமது தமிழ்நாட்டை சேர்ந்த மாணவி அமீரகத்தில் துணைவேந்தர் பாராட்டும் அளவிற்கு சிறந்து விளங்குவது நமக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும். இத்தகைய பெருமை சேர்க்கும் மாணவி ரிஃபா பாத்திமா அவர்களை நாமும் வணக்கம் பாரதம் இதழ் சார்பாக மேன்மேலும் பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் தெரிவிப்போம்.

M.நஜீம் மரைக்கா B.A.,

இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *