ராமநாதபுரம் மே, 14
தென்னையை தாக்கும் காண்டாமிருக வண்டை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி குறித்து வேளாண் கல்லூரி மாணவி செயல் விளக்கம் கொடுத்தார்.
மதுரை வேளாண் கல்லூரி மாணவர்கள் ஊரக வேளாண்மைப் பணி அனுபவ திட்டத்தின் கீழ் இராமநாதபுரம் மாவட்டத்தில் தங்கி கிராமங்களில் விவசாயிகளுடன் கலந்துரையாடி விவசாய அனுபவங்களை பயின்று வருகின்றனர்.
அதன் அடிப்படையில்,(10/05/2024) சித்தார்கோட்டை கிராமத்தில் மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயின்று வரும் இளங்கலை நான்காம் ஆண்டு மாணவி ம. சபரிஸ்ரீ தென்னையில் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் காண்ட்மிருக வண்டை கட்டுப்படுத்தும் இனக்கவர்ச்சி பொறி குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார்.
இவ்வண்டு தாக்குவதால் 10-15%
மகசூல் குறையும்.இனக்கவர்ச்சி பொறியை அமைக்கும் முறைகளைப் பற்றியும் அதன் பயன்கள் குறித்தும் விவசாயிகளுக்கு மாணவி எடுத்துரைத்தார். இதன்மூலம் விவசாயிகள் தங்கள் சந்தேகங்களை கேட்டறிந்து பயனடைந்தனர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்