Spread the love

மே, 9

இந்திய உணவுகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது தயிர். ஒவ்வொரு வீட்டின் சமையலறையிலும் நீக்கமற நிறைந்திருக்கும் தயிரில் நம் உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் உள்ளது. எந்த உணவோடும் தயிரை சேர்த்து சாப்பிடலாம் என்பதுதான் இதன் விசேஷம். இவ்வளவு சிறப்பு வாய்ந்த தயிரை தினமும் சாப்பிடலாமா? தயிரை சாப்பிடுவதால் நம் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன? அளவுக்கு அதிகமாக தயிரை சாப்பிட்டால் என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை இனி காண்போம்.

தயிரில் அதிகமான புரோபயாடிக் உள்ளது. இது நமது குடலில் நல்ல பாக்டீரியா உற்பத்தியாக துணை புரிகிறது. மேலும் நமது செரிமானத்திற்கும் மெட்டபாலிஸத்திற்கும் தயிர் உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த தயிரை உணவில் சேர்த்துக் கொள்வதால் மலச்சிக்கல், செரிமானக் கோளாறு போன்றவை ஏற்படாது.

உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது. குறைவான கலோரிகள் கொண்ட தயிரில் நார்ச்சத்து மட்டுமின்றி புரதமும் இருப்பதால், தினமும் இதை சாப்பிடுவதால் நீண்ட நேரம் பசி எடுக்காது.

தயிரில் நிறைய ஆண்டி ஆக்சிடெண்ட் உள்ளது. இது நமது உடலில் உள்ள நச்சுகளை அகற்றி ஃப்ரீ ரேடிக்கல் பாதிப்பிலிருந்து தடுக்கிறது.

தயிரில் உள்ள அண்டி ஆக்ஸிடெண்ட் உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து பளபளப்பான சருமத்தை தருகிறது. மேலும் தயிர் சாப்பிடுவதால் நம் உடலில் கொலஜன் உற்பத்தி அதிகமாகி இளமை தோற்றத்தை தருகிறது.

கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் உடலுக்கு தேவையான பல மினரல்கள் தயிரில் நிறைந்துள்ளது. இவை நம் பற்களுக்கும், எலும்புகளுக்கும் வலுவை தருகின்றன.

தினமும் தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

உங்கள் செரிமான சக்தி பலவீனமாக இருந்தால் தயிரை தினமும் சாப்பிடாதீர்கள். தயிரில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மெதுவாக்கி மலச்சிக்கலை உண்டாக்கலாம்.

லாக்டோஸ் அலர்ஜி இருப்பவர்கள் பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அப்படியும் மீறி சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, தோல் அரிப்பு, சுவாசப் பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.

ஒருசிலர் எந்த நேரமும் தயிர் சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். தயவுசெய்து இந்தப் பழக்கத்தை உடனடியாக நிறுத்துங்கள். முக்கியமாக இரவு நேரத்தில் தயிர் சாப்பிடாதீர்கள். அதையும் மீறி சாப்பிட்டால் வாயு தொல்லை, நெஞ்செரிச்சல் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளது.

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சாகும். ஆகவே தயிரை அளவாக எடுத்துக் கொள்ளுங்கள். தயிரில் உள்ள கேசின் என்ற புரதம் அழற்சியை ஏற்படுத்தி மூட்டு இணைப்புகளில் வலியை உண்டாக்குகிறது. ஆகையால் மூட்டு வலி போன்ற பிரச்சனையில் இருப்பவர்கள் தயிரை அளவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *