Spread the love

மே, 8

கொழுக்கட்டையில் இரண்டு வகைகள் உள்ளன. ஒன்று கார கொழுக்கட்டை மற்றொன்று இனிப்பு கொழுக்கட்டை. இதில் இனிப்பு கொழுக்கட்டையைத் தான் நிறைய பேர் விரும்பி சாப்பிடுவர். இந்த இனிப்பு கொழுக்கட்டையானது அரிசி மாவு, வெல்லம், தேங்காய், பருப்பு, நெய், ஏலக்காய் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

கொழுக்கட்டையில் புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகள், டயட்டரி நார்ச்சத்துக்கள் போன்றவை அதிகம் உள்ளன. கொழுக்கட்டையை உட்கொண்டால், அதில் உள்ள உட்பொருட்கள் உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும்.

கொழுக்கட்டைகளை வேக வைத்தோ அல்லது எண்ணெயில் போட்டு பொரித்தோ செய்யலாம். ஆனால் இவற்றில் வேக வைத்து தயாரிக்கப்படும் கொழுக்கட்டைகளே சத்தானது. ஏனெனில் ஆவியில் வேக வைக்கும் போது, அதில் உள்ள சத்துக்கள் அப்படியே தக்க வைக்கப்படுகின்றன. மேலும் ஆவியில் வேக வைக்கும் கொழுக்கட்டை சாப்பிடுவதற்கு மென்மையாக இருப்பதோடு, எளிதில் செரிமானமாகி, அதில் உள்ள சத்துக்கள் உடலால் முழுமையாக உறிஞ்சப்படும்.

நல்ல சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்ய தேவையான பொருட்கள்:

வெளிப்புறத்திற்கு…

* கொழுக்கட்டை மாவு – 1 கப்

* எண்ணெய் – சிறிது

* நெய் – 2 டேபிள் ஸ்பூன்

* உப்பு – 1/2 டேபிள் ஸ்பூன்

உள்ளே வைப்பதற்கு…

* வெல்லம் – 1 கப்

* துருவிய தேங்காய் – 1/4 கப்

* பாசிப்பருப்பு – 1/4 கப்

* குங்குமப்பூ – சிறிது

* ஏலக்காய் – சிறிது

கொழுக்கட்டை மாவு என்பது பச்சரிசி மாவு. இதில் மக்னீசியம் அதிகம் உள்ளன. இது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது. மேலும் இது இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது மற்றும் இதில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் செரிமான பிரச்சனைகளை சரிசெய்ய உதவுகிறது. அதோடு இது நீண்ட நேரம் வயிற்றை நிரப்பி வைத்திருந்து, பசியுணர்வைக் குறைக்கிறது.

தேங்காய் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்ட ஒரு உணவுப் பொருள். இது அசிடிட்டியில் இருந்து நிவாரணம் அளிக்கிறது மற்றும் இதயத்தை வலுப்படுத்துகிறது. கொழுக்கட்டை செய்யும் போது தேங்காயை சேர்ப்பதால், அது மன அழுத்தத்தை நீக்கி, செரிமான மண்டலத்திற்கு ஒருவித குளிர்ச்சியை அளிக்கிறது. அதோடு இது நச்சு நீக்கும் செயல்முறையை அதிகரிக்கிறது மற்றும் நல்ல தூக்கத்தைப் பெற உதவுகிறது.

கொழுக்கட்டையில் சர்க்கரைக்கு மாற்றாக வெல்லத்தை சேர்ப்பது நல்லது. ஏனெனில் வெல்லத்தில் தேவையான கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் ஜிங்க், செலினியம் போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. முக்கியமாக வெல்லம் குடலியக்கத்தை சீராக்கி, மலச்சிக்கலைத் தடுக்கும்.

கொழுக்கட்டையில் நெய் சேர்க்கும் போது, அது அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உறிஞ்சுவதை மேம்படுத்துகிறது. முக்கியமாக நெய் குடல் சுவரில் உள்ள காயங்களை குணப்படுத்துகிறது மற்றும் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்றி, மூளை மற்றும் நரம்பு மண்டலத்திற்கு ஊட்டமளிக்கிறது. முக்கியமாக இது மன ஆரோக்கியத்தை மேம்படுத்தி, நினைவாற்றலை அதிகரிக்க உதவுகிறது.

பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது. மேலும் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது. அதோடு கொழுப்புக்கள் இழப்பதை ஊக்குவிக்கிறது மற்றும் இதய நோயைத் தடுக்கிறது. இப்படி கொழுக்கட்டை செய்ய பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களும் உடலுக்கு பலவிதமான நன்மைகளை அளிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *