Spread the love

துபாய் ஏப்ரல், 30

ஐக்கிய அரபு அமீரக துபாய் தேரா, அல் முத்தீனா பகுதியில் வசித்துவரும்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த, அறந்தாங்கி பகுதி பொறியாளர் பிரதாப் அழகு தன் சிறு வயது முதல் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தி அமீரக துபாயில் சிறப்பான அந்த பயிற்சிகளை தானும் பயின்று மற்றவர்களுக்கும்
கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தைச் பிரதாப் அழகு, தன் விரலால் 22.66 கிலோ எடை உள்ள ஜிம் உபகரணங்களை வெறும் விரல் நகத்தை ,பயன்படுத்தி தூக்கி (Finger Nail Weight Lifting), சாதனை படைத்துள்ளார்.

மேலும் முந்தைய சாதனையாளர் தூக்கிய 22.5 கிலோ எடையினை முறியடித்து, புதிய சாதனை படைத்துள்ளார். இந்த நிகழ்வில் தமிழக குரல் நாளிதழ் தமிழக குரல் தொலைக்காட்சி புதுகை தொலைக்காட்சி கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் முன்னிலையில் நடைபெற்றது. மற்றும் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்துக்கொண்டு கரகோஷம் வாழ்த்துக்கள் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்./அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *