துபாய் ஆக, 27
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் உள்பட 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இன்று துபாயில் கோலாகலமாக தொடங்க உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகள் மோதுகின்றன. இன்று முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோத உள்ளன. இரண்டாவது போட்டியில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டி வரும் நாளை நடக்கிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளரான முகமது வாசிம் முதுகுவலி காரணமாக துபாயில் பயிற்சியிலிருந்து வெளியேறினார். முகமது வாசிமுக்கு பதிலாக ஹசன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.