ஏப்ரல், 12
சிவப்பரிசி இடியாப்பம் சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றது.
உணவு விசயத்தில் பயந்து பயந்து வாழும் சக்கரை நோயாளிகள் கூட சிவப்பரிசி இடியப்பத்தினை அச்சம் இன்றி சாப்பிடலாம்.
இன்று நாம் கூறும் முறையில் செய்து ருசியுங்கள்.
தேவையான பொருட்கள்
சிவப்பு அரிசி மாவு – 1 கப்
கொதிநீர் – தேவையான அளவு
உப்பு – சிறிதளவு
வெல்லத்தூள் – தேவையான அளவு
தேங்காய் துருவல் – அரை கப்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன் கொதிநீர், உப்பு சேர்த்து கரண்டியால் நன்றாக கிளறவும்.
சூடு ஆறியதும் மாவை நன்றாக பிசைந்து கொள்ளவும்.
இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
இடியாப்ப அச்சில் மாவை போட்டு இட்லி தட்டில் இடியாப்பமாக பிழிந்து 15 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான சிவப்பரிசி இடியாப்பம் ரெடி.
இதன் மேல் தேங்காய்ப்பூ வெல்லம் சேர்த்து ருசியாக சாப்பிடலாம்.