ஏப்ரல், 5
தினமும் அத்தி பழம் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் ஒரு விஷயமாகும். இதில் வைட்டமின்கள், கார்போஹைட்ரேட், கால்சியம், தாதுக்கள் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. இது உங்கள் எலும்புகளை வலுப்படுத்துவதோடு எலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வளிக்கும். மேலும் உடலுக்கு தேவையான ஆற்றலையும் சுறுசுறுப்பையும் தரும். அஜீரணம், மலச்சிக்கலை தடுப்பதோடு வயிறு மற்றும் குடல் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதோடு இதயத்தை ஆரோக்கியமாக வைக்கும்.