மதுரை மார்ச், 14
ஏப்ரல் 12ம் தேதி மதுரை சித்திரைத் திருவிழா நடைபெற உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொடியேற்றத்துடன் ஏப்ரல் 12ம் தேதி இந்த விழா தொடங்க உள்ள நிலையில், ஏப்ரல் 21ம் தேதி மீனாட்சி அம்மன் திருக்கல்யாணமும், ஏப்ரல் 23-ல் வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.