ஆந்திரா மார்ச், 13
மாதாந்திர பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் இன்று நடை திறக்கப்படுவதாக தேவசம்போர்டு அறிவித்துள்ளது. பங்குனி உத்திர திருவிழாவிற்காக மார்ச் 16-ல் கொடியேற்றம் மார்ச் 25ல் பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெற உள்ளது. பக்தர்கள் sabarimala.org.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யாத பக்தர்கள் நிலக்கல் பம்பையில் உடனடி முன்பதிவு செய்து கொள்ளலாம்.