Spread the love

பிப், 18

நண்டு நாவிற்கு விருந்து கொடுக்கும் வண்ணம் வித்தியாசமான சுவையுடன் இருப்பதோடு, உடலுக்கு ஆரோக்கியமானதும் கூட. இதற்கு காரணம் நண்டில் நிறைந்துள்ள ஊட்டச்சத்துக்கள் தான்.

அதிலும் நண்டில் கனிமச்சத்துக்கள் தான் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது. மேலும் இதில் கொழுப்புக்கள் மற்றும் கலோரிகள் மிகவும் குறைவு. எனவே இத்தகைய நண்டை டயட்டில் இருப்போர் சேர்த்துக் கொள்வது நல்லது.

நண்டில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்திற்கு தேவையான வைட்டமின் பி12 வளமாக நிறைந்துள்ளது. எனவே நண்டு சாப்பிட்டு வந்தால், இரத்த சோகை ஏற்படுவதைத் தடுக்கலாம்.

செலினியம் என்பது ஒரு ஆன்டி-ஆக்ஸிடன்ட் என்பது தெரியுமா? செலினியம் மற்ற ஆன்-ஆக்ஸிடண்ட்டுகளோடு சேர்ந்து, விஷத்தன்மையுள்ள அழுத்தத்தைத் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும் செலினியம் உடலில் குறைவாக இருந்தால், அது மூட்டுகளில் வீக்கத்தை ஏற்படுத்துவதோடு, கடுமையான வலியையும் ஏற்படுத்தும் என்று சொல்லப்பட்டுள்ளது. ஆகவே செலினியம் நிறைந்த நண்டை சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதத்தில் இருந்து விடுபடலாம்.

நண்டில் உள்ள புரோட்டீன் ஒருவரின் வளர்ச்சிக்கும், எலும்புகளுக்கும் மிகவும் இன்றிமையாதது. எனவே குழந்தைகளுக்கு நண்டு கொடுப்பது மிகவும் நல்லது. மேலும் நண்டு சாப்பிட்டால், முடி, நகம், சருமம் போன்றவையும் ஆரோக்கியமாக இருக்கும்.

காப்பர் மற்றும் ஜிங்க் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. ஏனெனில் இவை இரண்டும் தான் உடலானது வைட்டமின் டி-யை உறிஞ்சி, அதனால் எலும்புகள் கால்சியத்தை உறிஞ்ச உதவும்.

பருக்கள் இருந்தால், நண்டுகளை சாப்பிடுங்கள். ஏனெனில் நண்டில் உள்ள ஜிங்க் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்தும். இதனால் முகப்பருக்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.

நண்டில் கெட்ட கொலஸ்ட்ரால் உள்ளது. ஆனால் அதே சமயம் அதில் நியாசினும் அதிகமாக உள்ளது. இந்த வைட்டமின் பி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரித்து, கெட்ட கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவை குறைக்கும்.

மக்னீசியம் நரம்பு மற்றும் தசைகளின் இயக்கத்திற்கு மிகவும் முக்கியமானது. இத்தகையது நண்டில் உள்ளது. இதனால் நரம்புகள் தளர்ந்து, இரத்த அழுத்தத்தின் அளவு சீராக இருக்கும்.

கர்ப்பிணிகள் நண்டு சாப்பிடக்கூடாது. ஆனால் கருத்தரிக்க நினைக்கும் பெண்களுக்கு ஃபோலேட் மிகவும் இன்றியமையாதது. இந்த சத்து காய்கறிகள் மற்றும் பழங்களில் இருந்தாலும், நண்டில் அதிகமாகவே உள்ளது. எனவே இதனை கருத்தரிக்க நினைக்கும் போது அவ்வப்போது எடுத்து வந்தால், குழந்தைகளுக்கு நல்லது.

நண்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள கொழுப்புக்களின் அளவைக் குறைத்து, இதய நோய்களைத் தடுக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *