பிப், 15
பழுவக்காயை சாறாக்கி அருந்தும்போது ரத்த அழுத்தம் சீரான நிலையை அடையும்.
குளிர் காய்ச்சல், நுரையீரல் சார்ந்த தொற்று தொடர்புடைய பொதுவான வைரஸ் நோய்களிடமிருந்து தற்காத்துக் கொள்ள உதவுகிறது. இந்த காயில் ஒவ்வாமை எதிர்ப்புச் சக்தி, பாக்டீரியா எதிர்ப்புக் குணம், அழற்சிக்கு எதிராகப் போராடும் தன்மை நிறைந்து காணப்படுகிறது. கல்லீரலில் கொழுப்பு சேருவதைத் தடுத்து அதைப் பாதுகாக்கிறது.
நமது உடலில் காணப்படும் ஃப்ரீ ரடிக்கல்ஸ் (Free radicals) உயிரணுக்களின் வளர்ச்சியைத் தடுக்கின்றன. ஆனால், பழுவக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் ஃப்ரீ ரடிக்கல்ஸை நீக்கி ஆயுள்காலத்தை அதிகரிக்கின்றன.
இந்த காயில் குறைந்த அளவு கலோரியே காணப்படுவதால் உடல் எடையைக் குறைக்கவும் இவை பெருமளவில் பங்காற்றுகின்றன. இது உடலில் ஈரப்பதத்தைத் தக்க வைக்க உதவுகிறது.
சிறுநீரங்களில் கல் (கிட்னி ஸ்டோன்) உருவாகாமல் தடுக்கின்றன. தொடர்ந்து இந்த காயை உண்ணும் போது சிறுநீரகம், சிறுநீர்ப்பையில் இருக்கும் கல்லை நீக்க உதவுகிறது.
பழுவக்காயில் பீட்டா கரோட்டின், லுடீன், சாந்தைன்ஸ் ஆகியவை இருப்பதால் சருமத்தைப் பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. தோல் நோய்களில் இருந்து தற்காத்துக் கொள்ள இந்த காய் பெரிதும் உதவுகிறது. இதில் வைட்டமின் ’ஏ’ காணப்படுவதால் கண் பார்வைக்கு நல்லது.
உணவுக்குழாய், சிறுகுடல் ஆகியவற்றில் ஏற்படும் அழற்சி காரணமாக வயிற்றுப்புண் ஏற்படுகிறது. காரம் சேர்த்துக் கொள்ளாமல் பழுவக்காயை சமைத்து சாப்பிட்டு வர வயிற்றுப்புண் குணமாகும். அது மட்டுமில்லாமல் மூலநோய்களுக்கும் இது சிறந்த பலனளிக்கும்.
இது மூளை மற்றும் நரம்பியல் பாதுகாப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. அதனால் மூளையின் செயல்பாட்டிற்கு உதவுகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக சர்க்கரை நோயாளிகளுக்கும் சிறந்த உணவாக இருக்கிறது. இந்த காய் ஆண்டு முழுவதும் கிடைக்காது. ஆனால் தலை முதல் பாதம் வரையிலான பலன்களைக் கொண்டுள்ளது என்பதால் கிடைக்கும் போது மறக்காமல், மறுக்காமல் சாப்பிடுவது நல்லது.