கீழக்கரை பிப், 6
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிரஸெண்ட் ரத்த உறவுகள் சார்பில் உயிர் காக்கும் தோழர்கள் சந்திப்பு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் லயன்.முகம்மது ரஃபி,வருமான வரித்துறை கூடுதல் ஆணையர் கவிதா ராமானுஜம்,கவிஞர் ரேகா,மஹாராஜா குழுமம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன. ராமநாதபுரம் குடும்ப நல மருத்துவர் ஹவ்வா மன்சூர், கீழக்கரை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ஜவாஹிர் ஹுசைன் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.
உயிர் காக்கும் தோழன் விருதினை கீழக்கரை இரத்த உறவுகள் அமைப்பிற்கு வழங்கப்பட்டது. இதை கீழக்கரை இளைஞர் கபீர் பெற்றுக்கொண்டார்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்