ராமநாதபுரம் டிச, 13
ஸ்மார்ட் மின்மீட்டர் திட்டத்தில் தமிழக அரசு நிராகரிக்க கோரி விவசாயிகள் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் முத்துராமு தலைமை வகித்தார். மாவட்ட செயலர் மயில்வாகனன், சிஐடியு மாவட்ட செயலர் சிவாஜி, மார்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜ்குமார், தாலுகா செயலர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசினர். மக்களிடம் பெற்ற கையெழுத்து படிவத்தை மின்வாரிய பொறியாளரிடம் ஒப்படைத்தனர்.