டிச, 1
நம் தமிழ் நாட்டில் நிறைய வகை அரிசிகள் புழக்கத்தில் உள்ளன. சீரக சம்பா அரிசி, பாஸ்மதி அரிசி, சிவப்பு அரிசி, பாலகாட் மட்டா அரிசி, வெள்ளை அரிசி, குதிரைவாலி அரிசி, சாமை அரிசி போன்றவை குறிப்பிட தக்கது. இதில் குதிரைவாலி அரிசி குதிரையின் வாலைப் போன்று இருப்பதால் இதற்கு இப்படி பெயரிடப்பட்டுள்ளது. குதிரைவாலி அரிசி தமிழகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சண்டிகர் போன்ற மாநிலங்களில் பரவலாக பயிரிடப்படுகிறது. பழுப்பு நிறமுடைய இந்த அரிசியான புழுங்கல், பச்சை ஆகிய இரண்டு வகைகளிலும் கிடைக்கிறது. இந்த குதிரைவாலி அரிசி மூலம் நாம் பெரும் பயன்கள் பற்றி இப்போது விளக்கமாக காணலாம்.
குழந்தையின் வளர்ச்சிக்கு குதிரைவாலி அரிசி:
வளரும் குழந்தைகளுக்கு தேவைப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட், பாஸ்பரஸ், கால்சியம், நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, போன்றவை குதிரைவாலி அரிசியில் அதிகமாக காணப்படுகிறது. வளரும் குழந்தைகளுக்கு குதிரைவாலி அரிசியை தினசரி உணவாக சமைத்து சாப்பிட கொடுத்து வந்தால் நாள் முழக்க சுறுசுறுப்பாகவும், ஆற்றலுடனும் இருப்பார்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
எலும்பு வலிமைக்கு குதிரைவாலி அரிசி :
குதிரைவாலி அரிசியில் பாஸ்பரஸ் , சுண்ணாம்பு சத்து அதிகளவில் காணப்படுகிறது. இந்த குதிரைவாலி அரிசியை சமைக்கும் போது கால்சியம் பாஸ்பேட்டாக மாறுகிறது. இதனால் தினசரி உணவில் குதிரைவாலி அரிசியை சமைத்து சாப்பிடும் போது எலும்புகள் வலிமை பெறுவதோடு பற்களும் உறுதி பெரும்.
சர்க்கரை வியாதிக்கு குதிரைவாலி அரிசி:
பொதுவாக சர்க்கரை நோய் ஏற்பட காரணமாக இருப்பது நாம் அதிக அளவில் கார்போஹைட்ரேட் உள்ள உணவுகளை உண்பது தான். குதிரைவாலி அரிசியை பொறுத்தவரை இதில் நார் சத்து மட்டும் புரதசத்து தான் அதிக அளவில் உள்ளது.
இன்று சர்க்கரை நோயாளிகள் பலர் அரிசி உணவிற்கு மாற்றாக கோதுமையை தான் உண்டு வருகின்றனர். ஆனால் கோதுமையை காட்டிலும் இந்த குதிரைவாலி அரசி தான் உடலில் அதிக அளவில் உடனே சர்க்கரை சேராமல் இருக்க உதவுகிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் இதை உன்ன முயற்சிக்கலாம்.
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்கும் குதிரைவாலி அரிசி:
நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து குதிரைவாலி அரிசியில் அடங்கியுள்ளது. ஆகையால் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்கள் இந்த குதிரைவாலி அரிசியை நாள்தோறும் சமைத்து சாப்பிட்டால் தீர்வு கிடைக்கும். மேலும் மூலப் பிரச்சனைக்கு குதிரைவாலி அரிசியை ஆய்வுகள் பரிந்துரை செய்கின்றன.
கண் குறைபாட்டை தடுக்கும் குதிரைவாலி அரிசி:
பீட்டா கரோட்டின் சத்து குதிரைவாலி அரிசியில் உள்ளது. இந்த பீட்டா கரோட்டின் கண் குறைபாட்டை தடுக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் தினசரி குதிரைவாலி அரிசியை சமைத்து உண்டு வந்தால் கண் சம்பந்தமான குறைபாடுகள் நீங்கி பார்வைத்திறன் அதிகரிக்கும். மற்றும் கண்களை சுற்றி இருக்கும் கருவளையத்தையும் நாளடைவில் படிப்படியாக நீக்க இது உதவுகிறது.
உடல் எடையைக் குறைய குதிரைவாலி அரிசி:
குதிரைவாலி அரிசியில் புரதச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, தாது உப்புகள் பெருமளவில் உள்ளதால் உடல் எடையை குறைக்கவும், கொழுப்பைக் குறைக்கவும் இது அதிகமாக பயன்படுகிறது. அதோடு உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கவும் இது உதவுகிறது.
நீர்க்கடுப்பு பிரச்சனைக்கு குதிரைவாலி அரிசி:
குதிரைவாலி அரிசியை தொடர்ந்து உணவாக உண்டு வந்தால் நீர் கடுப்பு பிரச்சனை நீங்கும். அதே சமயம் சிறுநீரை பெருக்குவதோடு உடலில் உள்ள தேவையற்ற உப்புகள் மற்றும் கழிவுகளை அகற்றவும் இது உதவுகிறது. மேலும் சிறுநீர் பாதையில் ஏற்படும் புண்கள், கட்டிகளை அகற்றும் திறன் இந்த குதிரைவாலி அரிசிக்கு உண்டு.
செரிமான பிரச்னைக்கு குதிரைவாலி அரிசி
குதிரைவாலி அரிசியை தினசரி உணவில் பயன்படுத்தி வந்தால் செரிமான பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மேலும் உடலைக் கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ளவும் இது உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அதே சமயம் முதியோர்களுக்கு ஏற்படக்கூடிய ஜீரண கோளாறுகளை இது சரி செய்ய உதவுகிறது.
இரத்த சோகைக்கு குதிரைவாலி அரிசி:
குதிரைவாலி அரிசியில் இரும்புச்சத்து, புரதச்சத்து, நார்ச்சத்து அதிகளவில் உள்ளதால் இரத்த சோகை நோயைக்கும், உடல் வலிமைக்கும் பெருமளவில் இந்த அரிசியை மருத்துவர்கள் பலர் பரிந்துரை செய்கின்றனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
சளி, இருமல் பிரச்சனைக்கு குதிரைவாலி அரிசி:
மழைக்காலத்தில் பெரும்பாலான மக்கள் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணமாக உடலில் ஏற்பட கூட தோற்று மற்றும் பருவநிலை மாற்றம் தான். சளி இருமலுக்கு குதிரைவாலி அரிசியும் ஒருவகையில் சிறந்த தீர்வாக உள்ளது. மேலும் சுவாசக் கோளாறு பிரச்சனை உள்ளவர்களும் இதை தொடர்ந்து உண்டு வந்தால் பலன் ஏற்படுகிறது.
இதய நோய்க்கு பயன்படும் குதிரைவாலி அரிசி:
இதய நோய் உள்ளவர்கள் குதிரைவாலி அரிசியை தினசரி சாதமாக சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு மெதுவாக கட்டுக்குள் வரும். இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த நாளங்கள் சீராகவும், இதயத்துடிப்பு நன்றாகவும் இருக்கும்.
ஆழ்ந்த உறக்கத்திற்கு உதவும் குதிரைவாலி அரிசி:
இன்று பெரும்பாலான மக்கள் சரியான உறக்கம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். குதிரைவாலி அரிசியில் தயமின், ரிப்போஃப்ளோவின் போன்றவை இடம்பெற்றுள்ளதால் இதனை கஞ்சியாக இரவு உணவாக பயன்படுத்தினால் ஆழ்ந்த உறக்கம் கண்களை தழுவும் என்று ஆய்வுகள் தெரிவிக்கிறது
http://www.vanakambharatham24x7news.in
#Vanakambharatham#Kuthiraivaliricebenefits#news