Spread the love

நவ, 13

தீபாவளி அன்று சாப்பிடும் எண்ணெய் பலகாரங்களும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளும் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. தீபாவளி லேகியத்தைச் சாப்பிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

தீபாவளி லேகியம் சாப்பிட்டால், பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் பெறலாம். காலையில் எண்ணெய் தேய்த்துக் குளித்து முடித்ததுமே தீபாவளி லேகியத்தில் ஓர் உருண்டையை எடுத்து வாயில் போட்டுக்கொள்ளலாம்.

இது தீபாவளியின்போது உடல் கோளாறுகள் எதுவும் ஏற்படாமல் இருக்க ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை. தீபாவளி லேகியத்தைச் சாப்பிட்டால், அதிலிருந்து நிவாரணம் பெறலாம். தீபாவளி தினத்தில் மட்டுமல்லாமல், மற்ற நேரங்களிலும் இந்த லேகியத்தைச் சாப்பிடலாம். இது செரிமானக் கோளாறுகள் ஏற்படாமல் பாதுகாக்கும். பொதுவாகவே நாம் உண்ணும் உணவுகளில் கொழுப்புச்சத்து நிறைந்திருக்கிறது. இந்த லேகியத்தை வாரம் ஒருமுறை சாப்பிடுவது அனைவருக்குமே நல்லது.

தேவையான பொருட்கள் மிளகு – இரண்டு டீஸ்பூன், சீரகம் – இரண்டரை டீஸ்பூன், தனியா – இரண்டரை டீஸ்பூன், ஓமம் – 20 கிராம், கண்டதிப்பிலி – 10 குச்சிகள், சுக்கு – ஒரு துண்டு, ஏலக்காய் – இரண்டு, வெல்லம் – 100 கிராம்,

நெய் – தேவையான அளவு.

செய்முறை: இதில் வெல்லம், நெய் தவிர மற்ற பொருள்கள் அனைத்தையும் லேசாக வறுத்து, பொடியாக்கிக்கொள்ளவும். இது முழுமையாகப் பொடியாகாவிட்டால் சிறிது தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் ஊறவிட்டு மீண்டும் நைசாக அரைக்கவும். அரைத்த பொருள்கள் அனைத்தையும் ஓர் அடிகனமான வாணலியில் கொட்டி கேஸ் ஸ்டவ்வை `சிம்’மில்வைத்துக் கிளறவும். இடையே வெல்லம், நெய் என ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து மீண்டும் கிளறினால் தீபாவளி லேகியம் தயார். இது ஒருவேளைக்கு நான்கைந்து பேர் சாப்பிடப் போதுமானதாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *