Spread the love

அக், 21

சீதாப்பழம் இரத்த விருத்தி செய்யும். சோகை நோயைக் குணப்படுத்தும். இப்பழத்தில் குளுக்கோஸ் கணிசமாக உள்ளதால் உடல் சோர்வை அகற்றி சுறுசுறுப்பை ஏற்படுத்தும். நினைவாற்றலை அதிகரிக்கும் தன்மை சீதாப்பழத்திற்கு உண்டு.

சீதாப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்களும், கனிமச்சத்துக்களும் உள்ளதால் அது உடலுக்கு பல்வேறு நன்மைகளை வாரி வழங்கும். சீதாப் பழத்தில் உள்ள மெக்னீசியம் நமக்கு உடல்நல பயனை அளிக்கிறது. இதனால் மாரடைப்பு ஏற்படாமல் நம்மை அது பாதுகாக்கும்.

சீதாப் பழத்தில் வைட்டமின் பி வளமாக உள்ளது. இச்சத்து மூச்சுக்குழாய் அழற்சியைக் குறைக்கும் மற்றும் ஆஸ்துமா பிரச்சனை அண்டாமல் பாதுகாக்கும்.

சீதாப் பழம் கண் பார்வையின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். ஏனெனில் இதில் ரிபோஃப்ளேவின் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது.

மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க சீதாப்பழம் மிகச்சிறந்த மருந்து. சீதாப் பழத்தின் வெளித்தோற்றம் வித்தியாசமாக இருந்தாலும், அதன் உட்பகுதியில் உள்ள வெள்ளை நிற சதைப்பகுதி மிகவும் இனிப்பாக இருக்கும்.

சீதாப்பழச்சாறு குடித்து வர, சரும வறட்சி நீங்கி இயல்பு நிலை பெறும். சீதாப்பழத்தில் கணிசமான அளவு வைட்டமின் ‘சி’ உள்ளதால், சளி பிடிக்காது.

சீதாப் பழத்துடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து சாப்பிட்டு வர, கொலஸ்ட்ரால் சேராமல் காக்கும். சீதாப்பழத்துடன், குங்குமப்பூ சேர்த்துச் சாப்பிட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டாகும்.

சீதாப்பழத்துடன், சிறிது வெள்ளைப் பூண்டு வைத்து மைய்யமாக அரைத்து, தேமல் மீது பூசி வர, தேமல் மறையும். சீதாப்பழச்சாறுடன், திராட்சைப் பழச்சாறு கலந்து, பருகி வர, நரம்புகள் வலுப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *