செப், 28
இதய நோயைத் தடுப்பது வாழ்க்கை முறையை மாற்றுவது மற்றும் ஆரோக்கியமான பழக்கங்களை உருவாக்குவதைப் பொறுத்ததாகும். அவ்வாறு இதய ஆரோக்கியத்தை உறுதிப்படுத்த எந்தவொரு வயதினரும் வீட்டிலேயே சில எளிய வழிமுறைகளைப் பின்பற்றலாம். அவை,
டயட் : உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க ஆரோக்கியமான உணவு வழக்கத்தை பின்பற்றுங்கள். குறிப்பாக ஜங்-புட் உணவுகளை சாப்பிடுவதை குறைத்து விட்டு நிறைய பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உட்கொள்வதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் சிவப்பு இறைச்சியும் உங்கள் இதயத்திற்கு நல்லது. அதேபோல, போதுமான அளவு தண்ணீரை தவறாமல் குடிக்கவும்.
வழக்கத்தை ஏற்படுத்துதல் : சரியான வழக்கத்தை உருவாக்கி பின்பற்றவும். சரியான நேரங்களில் தூங்குதல் மற்றும் எழுந்திருக்கும் நடைமுறை அதற்கேற்ப வேலை செய்ய உங்கள் உடலை சமப்படுத்த உதவுகிறது. போதுமான இடைவெளிகளை எடுப்பது அல்லது வார இறுதி நாட்களில் ஓய்வெடுப்பது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.
புகைபிடித்தல் மற்றும் குடிப்பழக்கம் உங்கள் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். இது நோயெதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது. இது உங்களை நோய்த்தொற்றுகளுக்கு ஆளாக்கும்.
உங்கள் எடையைப் அடிக்கடி கவனியுங்கள் : ஆரோக்கியமான எடை மற்றும் பிஎம்ஐ பதிவைப் பராமரிக்கவும். ஆரோக்கியமான உடல் உங்கள் இதயத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது மற்றும் பிற நோய்களின் சாத்தியத்தை குறைக்க உதவும்.
உங்கள் உடற்தகுதிக்கான பயிற்சி : எந்தவொரு உடற்பயிற்சியும் உங்கள் ஆரோக்கியத்தை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும். ஒரு நாளில் குறைந்தது 30 நிமிடங்கள் நடைபயிற்சி, ஏரோபிக்ஸ் அல்லது நடனம் போன்ற உடற்பயிற்சிகளை தினசரி செய்யுங்கள். நீங்கள் புத்துணர்ச்சியாக உணர்வீர்கள்.
வேலைக்கு இடையில் இடைவெளி எடுத்துக் கொள்ளுங்கள் : வேலைகளுக்கு நடுவில் சிறிய இடைவெளிகளை எடுத்துக்கொள்வது உங்கள் மன அழுத்தத்தை நிதானமாகவும், கட்டுப்படுத்தவும் உதவும். இது உங்கள் இதயத்திற்கு நல்லது.
மருத்துவ உதவியை நாடுங்கள் : உங்கள் உடலில் மார்பு வலி, தேவையற்ற மூச்சுத் திணறல், கால்கள் வீக்கம், தலைசுற்றல் உள்ளிட்ட எளிய அறிகுறிகள் அல்லது அசாதாரணங்கள் ஏற்பட்டால் புறக்கணிக்காதீர்கள். இது இதயம் தொடர்பான பிரச்சினைகள் அல்லது இருதய நோய்களுக்கான அறிகுறியாக இருக்கலாம். குறிப்பாக 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் இந்த விஷயங்களில் கவனம் செலுத்துங்கள்.
பரிந்துரைக்கப்பட்ட மருந்தைப் பின்பற்றுங்கள் : இதய நிலைகள், நீரிழிவு நோய், அதிக பிபி மற்றும் அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகளை கொண்டவர்கள் தங்கள் மருந்துகளைப் சரியான முறையில் பின்பற்றி தொடர வேண்டும்.