செப், 25
கற்பூரம் ஆண்டிபயாடிக் நிறைந்தது. இது நமது ஆரோக்கியத்திற்கும், அழகுக்கும் மிகவும் நன்மை பயக்கும்.
கற்பூரம் பூஜை புனஸ்காரங்களுக்கு மட்டுமன்றி பல உபாதைகள், உடல் பிரச்சனைகளுக்கும் வீட்டு வைத்தியம் செய்ய உதவுகிறது. எப்படி, எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம். கற்பூரம் மற்றும் கற்பூர எண்ணெய் இரண்டும் மிகவும் பயனுள்ள பொருட்கள்.
கற்பூரம் பலருக்கும் ஏற்றுக்கொள்ளும் என்று சொல்லமுடியாது. எனவே பயன்படுத்தும் முன்பு மணிக்கட்டு பகுதியில் தேய்த்துவிட்டு எந்த அலர்ஜியும் இல்லை என்றால் பயன்படுத்தலாம்.
கைகள், உடலில் ஏதேனும் நமச்சல், எரிச்சல், எரியும் உணர்வு இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேய்த்தால் ஜில்லென இருக்கும். எரிச்சல் நீங்கும்.
கையில் தொற்றுகளால் ஏதேனும் பாக்டீரியா, பூஞ்சைகளின் வளர்ச்சி இருக்கிறதெனில், ஆணி, நகச்சுத்தி என இருந்தால் அந்த இடத்தில் கற்பூரத்தை தேங்காய் எண்ணெய்யில் பேஸ்ட் போல் குழைத்து தடவினால் குணமாகலாம்.
சிறு பூச்சிக் கடி என்றாலும் கற்பூரத்தை குழைத்துத் தடவலாம்.
கால்களில் வெடிப்பு என்றாலும் அதை சரிசெய்ய வெதுவெதுப்பான தண்ணீரில் கற்பூரத்தைக் கரைத்து காலை 15 நிமிடங்கள் ஊற வைத்து எடுங்கள். பின் கால்களில் தேங்காய் எண்ணெய் அல்லது வேஸ்லின் தடவுங்கள். இதை வாரம் ஒரு முறை செய்து வர வெடிப்பு நீங்கலாம்.
தலையில் பேன் இருந்தாலும் கற்பூரத்தை தேய்க்க பேன் இறந்துவிடும்.
தேங்காய் எண்ணெய் கலந்து தேய்க்க தலைமுடி வளர்ச்சி அடர்த்தியாகும். முடி கொட்டுதல் இருக்காது.வழுக்கை இருந்தால் கற்பூரம் எண்ணெய் முடி வளர உதவுகிறது என்று கூறப்படுகிறது.
மன அழுத்தத்தை குறைக்கிறது: கைகளில் கற்பூர எண்ணெயை தேய்த்து நுகர்வது மன அழுத்தத்தை குறைக்க உதவுகிறது.
முகத்தில் முகப்பருக்கள், பருக்களின் எரிச்சல், பருக்களின் கீரல்கள் இருந்தால் கற்பூர எண்ணெய் வாங்கி தடவலாம் அல்லது கற்பூரத்தை தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து தடவலாம்.
கை , கால், முட்டு வலி என உடலின் எந்த பகுதியில் வலி இருந்தாலும் தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சூடாக்கி மசாஜ் செய்ய வலி குறையும்.