கீழக்கரை செப், 17
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பாத்திமா ஆமினா மெடிக்கல் சென்டரில் நேற்று(16.09.2023)காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது.
கீழக்கரை ஆசி மருத்துவமனை மற்றும் KLK வெல்ஃபேர் கமிட்டி இணைந்து நடத்திய மாபெரும் இலவச மருத்துவ முகாமை கண்ணாடி வாப்பா அறக்கடளை டிரஸ்டி அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் துவக்கி வைத்தார்.
ராமநாதபுரம் ஆசி மருத்துவமனை டைரக்டர் மருத்துவர் ஆசிக் அமீன் தலைமையில் மருத்துவர்கள் முஹம்மது அமீர் கான், சர்மிளா மோகன், பாரதி பிரியா, ரஃபீகா கெய்சர் ஆகியோர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு மக்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை வழங்கினர்.
மேலும் எலும்பு முறிவு,நரம்பியல்,பெண்கள் மகப்பேறு, தோல் நோய்,நுரையீரல் உள்ளிட்ட மருத்துவ ஆலோசனைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன.
நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மருத்துவ முகாம் நிகழ்ச்சியை வெல்ஃபேர் கமிட்டி நிர்வாகிகளும், ஆசி மருத்துவமனை மருத்துவர் மணிகண்டன் தலைமையிலான செவிலியர் குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.