Spread the love

செப், 5

வெயில் காலம் வந்துவிட்டாலே நுங்கு வரத்து அதிகரித்துவிடும். எங்கு பார்த்தாலும் நுங்கு வியாபாரம் களைகட்டத் தொடங்கும். மக்களும் வெயில் சூட்டை தனிக்க, தாகத்தைத் தனிக்க நுங்கு உண்பார்கள். அதற்காக மட்டுமல்லாமல் அது உடலுக்கு இன்னும் பல நன்மைகளைக் கொடுக்கும்.

நுங்கை ஐஸ் ஆப்பிள் என செல்லமாகவும் அழைக்கிறார்கள். நுங்கு வெயிலின் தாக்கத்தை குறைக்க மனிதனுக்கு கிடைத்த அருமருந்தாகும்.

இது வெயில் காலத்தில் ஏற்படும் அம்மை நோய்களை தடுத்து உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை தந்து உடலை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

பனை நுங்கிற்கு கொழுப்பை கட்டுப்படுத்தி உடல் எடையை குறைக்கும் ஆற்றல் உண்டு. பனை நுங்கில் உள்ள நீரானது வயிற்றை நிரப்பி பசியை தூண்டுவதோடு, மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு இரண்டிற்குமே மருந்தாக பயன்படுகிறது.

உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்களுக்கு எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காது. பனை நுங்கை சாப்பிட்டால் அவர்கள் தாகம் அடங்கும். கர்ப்பிணிகள் நுங்கு சாப்பிட்டால், செரிமானம் அதிகரிப்பதுடன், மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இரத்தசோகை உள்ளவர்களுக்கு நுங்கு நல்ல மருந்தாகும்.

நுங்கில் காணப்படும் அந்த்யூசைன் எனும் இரசாயனம் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் கட்டிகள் வருவதை தடுக்கும் சக்தி கொண்டது.

பனை மரத்தில் இருந்து கிடைக்கும் நுங்கு நீரை தொடர்ந்து சாப்பிட்டு வர கோடைக்காலத்தில் ஏற்படும் வேர்க்குரு நீங்கும்.

நுங்கு, குடல் புண்ணை ஆற்றும் தன்மை உடையது. கோடையில் வெயில் கொப்பளம் வராமல் தடுக்க, நுங்கு சாப்பிடுவது அவசியம்.

பெரியோர்கள், இளம் நுங்கினை மேல்தோல் நீக்காமல் சாப்பிடுவது மிகவும் நல்லது. மேலும் இந்த நுங்கின் நீரை தடவினால் வேர்க்குரு மறையும்.

நுங்கு அதிகம் சாப்பிட்டால், உடலின் நீர்ச்சத்து அதிகரித்து, வெயிலினால் ஏற்படும் மயக்கம் குறையும்.

வயிற்றுப் புண், வயிற்றுப் பிரச்னை, மலச்சிக்கல், உடல் சோர்வு , தோல் நோய்கள், கல்லீரல் பிரச்னை, அஜீரணக் கோளாறு, ஆற்றல் குறைவு போன்ற பிரச்னைகளையும் இந்த நுங்கு சுளைகளால் சரி செய்யலாம். கர்ப்பிணிகளும் இந்த நுங்கை உண்டால் மலச்சிக்கலை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். அசிடிட்டி பிரச்னையும் இருக்காது.

நுங்கு சுளைகளை இளநீரில் ஊற வைத்து உண்டால் அத்தனை ருசியாகவும், குளிர்சியாகவும் இருக்கும். கூடுதல் சுவைக்கு சர்க்கரை தேவைப்பட்டால் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *