ஆக, 28
சருமத்தை வெள்ளையாக்கும் பண்புகள் ரோஸ் வாட்டரில் இருப்பதாக ஆராய்ச்சிகளில் தெரிய வந்துள்ளது.
இது உங்கள் முகத்தை பிரகாசமாக வைத்து கொள்ள உதவுகிறது.
முகத்தில் இருக்கும் கருமையை குறைக்கும் பண்புகளும் ரோஸ் வாட்டரில் உள்ளன. ரோஸ் வாட்டரில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பரு, பாக்டீரியா தொற்று ஆகியவை ஏற்படாமல் தடுக்கிறது. அதே போல் ரோஸ் வாட்டர் முகப்பரு பிரச்சனையை குறைக்கவும் உதவுகிறது.
மேலும் சருமத்தை ஈரப்பதமாக வைத்திருக்க உதவும் பண்புகள் ரோஸ் வாட்டரில் உள்ளன. இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பது மட்டுமல்லாமல் புதிய செல்கள் உருவாகவும் உதவுகிறது.
தவறான வாழ்க்கை முறை காரணமாக முகம் மற்றும் கண்களுக்கு கீழே அடிக்கடி வீக்கம் ஏற்பட தொடங்குகிறது. ரோஸ் வாட்டரில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்க உதவுகின்றன. காட்டனில் ரோஸ் வாட்டரை நனைத்து முகத்தில் உள்ள வீங்கிய பகுதிகளில் தடவ வேண்டும்.