Spread the love

ஆக, 26

காலையில் எழுந்ததும் ஒரு சிறிய துண்டு இஞ்சி அல்லது இஞ்சி சாற்றை குடித்து வந்தால், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். பசி உணர்வுகள் அதிகம் இல்லாதவர்கள், காலையில் சிறிது இஞ்சியை வாயில் போட்டு மென்று வந்தால், பசியுணர்வு அதிகரிக்கும். இஞ்சி சாறு, எலுமிச்சை சாறு, வெங்காய சாறு மூன்றையும் கலந்து ஒருவேளை அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டுவர ஆரம்ப கால ஆஸ்துமா, இரைப்பு, இருமல் குணமாகும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்

ஒற்றைத் தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் சிறிது இஞ்சியை அரைத்து பேஸ்ட் செய்து, நீரில் கலந்து நெற்றியில் தடவ நல்ல பலன் கிடைக்கும்.

சிறிது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடித்து வந்தால், நெஞ்சுப் பகுதியில் தேங்கியுள்ள சளி பிரச்சனைக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.

இஞ்சி சாறை பாலில் கலந்து பருகுவதன் மூலம் வயிறு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமடைவதோடு உடம்பும் இளைக்கும். மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி என்பன நீங்க இஞ்சியை துவையல், பச்சடி செய்து சாப்பிட வேண்டும்.

பல்வலி ஏற்படும் போது, இஞ்சி துண்டை ஈறுகளில் மசாஜ் செய்யலாம் அல்லது இஞ்சியை நீரில் தட்டிப் போட்டு கொதிக்க வைத்து, அந்த நீரினால் வாயைக் கொப்பளிக்க வேண்டும்.

இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்த பின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

இஞ்சி குமட்டல் மற்றும் வாந்தி மற்றும் காலையில் ஏற்படும் சோர்வை போக்க இஞ்சியை வெரும் வயிற்றில் ஒரு துண்டு சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இஞ்சியைத் தட்டி நீரில் போட்டு கொதிக்க வைத்து இறக்கி, அதில் தேன் கலந்து குடித்தால் செரிமானப் பிரச்சனைகள் நீங்கும். அதுவும் இதை காலையில் குடித்தால் செரிமான மண்டலம் சுத்தமாகி, அதன் செயல்பாடு அதிகரிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *