ஆக, 16
காய்கறிகள் என்று எடுத்துக்கொண்டாலே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கூடிய ஒன்று. இன்றைய தலைமுறையினர் பெரும்பாலும் உடலுக்கு சத்து தரக்கூடிய உணவுகளை எடுத்துக்கொள்ளாமல் வெளியில் வாங்கி உண்பதையே விரும்புகிறார்கள். வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்கள் காய்கறிகளை எவ்வளவு ருசியாக சமைத்து கொடுத்தாலும் அதை வீட்டில் இருக்கக்கூடிய சின்னஞ் சிறுசுங்களுக்கு பிடிக்காது. அதிலும் பீன்ஸ் பொரியல் செய்து வைத்தால் அறவே சாப்பிட மாட்டார்கள். நாம் எதை ஒதுக்கி வைத்து சாப்பிடுகிறோமா அதில்தான் அதிகளவு சத்து நிறைந்து கிடக்கிறது.
புற்றுநோயானது பெண்களுக்கு மட்டுமல்லாமல் ஆண்களுக்கும் இப்போது அதிக தாக்கத்தினை ஏற்படுத்துகிறது. புற்றுநோய்களில் பல வகையான புற்றுநோய்கள் இருக்கிறது. புற்றுநோய் இருப்பவர்கள் தினமும் உணவில் பீன்ஸை சேர்த்துக்கொண்டால் பீன்ஸில் இருக்கக்கூடிய ஃப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் உண்டாக்கும் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, புற்றுநோயை வராமல் தடுத்து பாதுகாத்து கொள்கிறது.
காரசாரமான உணவுகளை அதிகமாக சாப்பிடுவதால் ஒரு சிலருக்கு மலச்சிக்கல் மற்றும் வயிற்று உபாதை பிரச்சனைகள் ஏற்படுகிறது. நாம் சாப்பிடும் உணவு எளிதில் சீரணம் ஆகாமல் மலச்சிக்கல் பிரச்சனையில் கொண்டு போய் விடுகிறது. மலச்சிக்கல் பிரச்சனை இருப்பவர்கள் உணவில் தினமும் பீன்ஸ் பொரியல், கூட்டு போன்றவைகளை சேர்த்துக்கொள்வதன் மூலம் மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
உடலில் சர்க்கரை நோய் இருப்பவர்கள் எந்த ஒரு சர்க்கரை சேர்த்த உணவுகளையும் பார்த்து பார்த்து சாப்பிடுவார்கள். இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவினை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு பீன்ஸ் பெரிதும் உதவுகிறது. ஏனென்றால் பீன்ஸில் இருக்கக்கூடிய கார்போஹைட்ரேட் உடலில் இரத்தத்தில் அதிக அளவு சர்க்கரையை சேர்க்க விடாமல் தடுத்து நிறுத்துகிறது.
அதிக உடல் எடை இருந்தால் தொடர்ந்து பல மணிநேரம் எந்த வேலைகளையும் முழுமையாக பார்க்க முடியாது, அதிக எடையுள்ள எந்த பொருளையும் தூக்க சிரமப்படுவார்கள். தேவையில்லாத கொழுப்புகள் உடலில் சேருவதால் தான் உடல் எடையானது அதிகரித்து காணப்படுகிறது. பீன்ஸில் தேவையில்லாத கொழுப்புகளை குறைக்கும் ஆற்றல் அதிகமாக இருக்கிறது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் உணவில் பீன்ஸை சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.