Spread the love

ஜூலை, 26

எப்பொழுதும் நாம் செய்கின்ற எந்த வேலையாக இருந்தாலும் விருப்பத்துடன் செய்ய வேண்டும், இல்லையெனில் அதுவே நமக்கு உடல் சோர்வை ஏற்படுத்திவிடும்.

அதிக வேலை, அதிக நேரம் பயணம் செய்வது, வயது போன்ற காரணங்களுடன், சில ஆரோக்கிய பிரச்சனைகளான கால்சியம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழிவு நோய், இதய நோய், தைராய்டு, ஆர்த்ரிடிஸ் போன்ற பிரச்சனைகளினாலும் இந்த உடல் சோம்பல் வர காரணங்கள் என்று சொல்லலாம்.

இந்த காலை எழுந்தவுடன் கை, கால் வலி அல்லது குடைச்சல், தசைகளில் அதிக வலி போன்ற அறிகுறிகள் உடல் சோர்வடைந்ததற்கான அறிகுறிகள் என்று சொல்லலாம்.

சோர்வை போக்க தினமும் காலையில் எழுந்ததும், ஏதேனும் ஓர் உடற்பயிற்சியை செய்து வந்தால், நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் செயல்படலாம். எனவே ரன்னிங், வாக்கிங், யோகா, சைக்கிளிங் போன்ற சிம்பிளான சில பயிற்சிகளை அன்றாடம் மேற்கொண்டு வாருங்கள். இதனால் நிச்சயம் நல்ல மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.

உடலுக்கு தண்ணீர் போதிய அளவில் இருந்தால் தான் சீராக இயங்கும். உடலில் நீர் சரியான அளவில் இல்லாவிட்டால், உடலியக்கம் குறைந்து, மிகுந்த சோர்வை உண்டாக்கி, கவனச்சிதறலை அதிகரித்துவிடும். எனவே அவ்வப்போது தண்ணீரைக் குடித்து வாருங்கள். இதனால் எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

தூக்கமின்மை காரணமாக கூட உடல் சோர்வு ஏற்படும், மேலும் உடலில் ஆரோக்கியமும் பாதிக்கப்படும். எனவே தினமும் சரியான அளவு தூக்கத்தை மேற்கொள்வதோடு, ஒரே நேரத்தில் தூங்கி எழும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் நாள் முழுவதும் உடலின் ஆற்றல் சீராக இருக்கும். இதனால் உடல் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.

உடல் எடை அதிகமானாலும் உடலில் சோம்பல் ஏற்படும்:

உடல் எடை அளவுக்கு அதிகமாக இருந்தால், உடலில் ஆற்றல் குறைவாகவே இருக்கும்.

எனவே உடல் எடையைக் குறைக்க, சரியான டயட் மற்றும் உடற்பயிற்சியை மேற்கொண்டு வாருங்கள். இதனால் உடல் சோர்வு நீங்க ஆரம்பிக்கும்.

சோர்வை போக்க அல்லது உடல் சோர்வு நீங்க கொஞ்சம் கொஞ்சமாக பலமுறை சாப்பிடவும் மற்றும் சிறு இடைவெளியில் ஏதேனும் ஆரோக்கியமான உணவுப் பொருளை சாப்பிட்டவாறு இருக்கவும்.

இப்படி சாப்பிடுவதால், உடலில் இரத்த சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

அதுமட்டுமின்றி காலை உணவை தவறாமல் சாப்பிட வேண்டும். ஒரு நாளில் காலை உணவு தான் மிகவும் முக்கியமானது.

காலை உணவை தவறாமல் உட்கொண்டு வந்தாலேயே, நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *