திருவண்ணாமலை ஜூலை, 2
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் பௌர்ணமி தின சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். மேலும் பௌர்ணமி நாளில் பொது தரிசனத்தில் பக்தர்கள் விரைவாக தரிசிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், சிறப்பு தரிசனம் மூலம் கோவிலுக்கு பல கோடி ரூபாய் வருவாய் கிடைத்து வந்த நிலையில், பக்தர்களின் நலன் கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.